அலுவல் சார்ந்த முதல் விமானப் பயணம், பாரிஸுக்கு.
திருமணம் ஆகி ஓர் ஆண்டுக்கு பிறகு நடந்தது.
நாங்கள் மூன்று பேர் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிபவர்கள் ஒன்றாக போனோம்.
பாசத்துல ஊருல இருந்து என்னோட அப்பா & அம்மா வழியனுப்ப வந்திருந்தாங்க.
ஒரு வழியா ஜன்னல் சீட்டு :-) வாங்கி உட்க்கார்ந்தாச்சு.
பிளைட் பாரிஸ் போனவுடன் அங்கிருந்து நார்த் ஸ்டேஷன் (ரயில் நிலையம்) செல்வதற்காக போனோம்.
ஒரு இடத்தில் அம்பு குறி கீழ்நோக்கி இருந்தது.
அத பார்த்து கீழ போனோம்.
அப்புறம் தான் தெரிஞ்சது அப்படி போட்ட, நேரா போகணுமாம் :-(
ஒரு வழியா ரயிலில் ஏறியபிறகு , ஓரளவுக்கு கூட்டம் இருந்தது.
அப்புறம் மூன்று ஆப்பிரிக்கர்கள் வந்தார்கள்.
ஒருத்தன் சில்லறையை கீழ போட்டான்.
நான் உடனே டேய் இதெல்லாம் பழைய காலத்து டெக்னீக்குடா நெனச்சுககிட்டு இருக்கும்போது என்
பேக் -பேகை ஒருத்தன் பின்பக்கமா எடுத்தான்.
என் கூட வந்தவன் பின்னாடி தான் இருந்தான்.
டேய், மச்சான் விளையாடாதாடான்னு சொல்லி பார்த்த, வேற ஒருத்தன் இருக்கான்.
செம டென்ஷன் ஆயிடுச்சு.
பார்த்தா அவனுக்கு பின்னாடி நம்ம ஆளு நின்னுகிட்டு ஹேய்-ன்னு கத்தறான்.
அவன் பயந்து போய் திருப்பி கொடுத்துட்டு கீழ இறங்கிட்டான்.
ரயிலுள்ள பாக்குறேன் .
ஒரு பக்கியும் கண்டுக்கவே இல்லை.
அங்க சாதாரணம் போல, திருடுறது.
நம்ம ஊரா இருந்து பொளந்து இருப்போம்ல!!!
அதுல தான் என் பாஸ்போர்ட் , பர்ஸ் எல்லாம் வச்சிருந்தேன்.
உடனே பாண்ட் பாக்கெட்டிற்கு மாத்திட்டேன்.
அடுத்த நாள்,லான்ஸ (Lens) என்ற இடத்திற்கு போனோம்.
240 கி.மீ 1.5 மணி நேரத்தில் போய்ட்டான் :-)
ஒரு நாள் மீட்டிங்-லாம் முடிச்சிட்டு mayanne-ன்னு ஒரு இடத்துக்கு போனோம்.
அங்க 2 நாள்.
ஒரு வழியா 3 நாளில வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு,
அங்கிருந்து திரும்ப பாரீஸ் வருவதுக்கு
எங்க CEO / COO ரெண்டு பெரும் எங்களோட சேர்ந்து
செமயா திட்டம் போட்டோம்.
இப்ப இங்க இருக்க Zoom கார் மாதிரி ஒரு van-ஐ வாடகைக்கு எடுத்து
ஏர்போர்ட்டுல அந்த கார விட்டுட்டா அவங்களே எடுத்துப்பாங்க.
அந்த வண்டி பேர் ஞாபகம் இல்லை.
ரொம்ப வேகமா போக முடியலை. அப்பவும் நடுவுல பிரேக் எடுத்தோம்.
அரைமணி நேரம் (Gate opening time) முன்னால தான் வந்து சேர்ந்தோம்.
டெர்மினல் -2 போகணும். என் பேச்ச கேட்காம டெர்மினல் -3 க்கு போனோம்.
CEO /COO நாங்க வண்டிய நிறுத்திட்டு வரோம்,
நீங்க முன்னாடி போங்கன்னு சொன்னாங்க.
நான் எதிர்பார்த்தபடியே டெர்மினல் -3 அந்த விமானம் புறப்படலை.
டெர்மினல் -2 போனா விட மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க.
அப்புறம் கெஞ்சி ஓகே சொல்லி, லக்கஜே செக்-இன் பண்ண பிறகு,
அவங்க 2 பேரும் வந்தாங்க.
எங்க மூணு பேர மட்டும் தான் உள்ள விட்டாங்க.
Security check-லாம் நடக்கவே இல்ல.
15-20 நிமிடத்தில் கேட்டுக்கு வந்துட்டோம்.
மொத தடவையே இப்படி எல்லாம் ஆச்சேன்னு ஒரே பீலிங்.
நிற்க, இன்னும் இருக்கு...
துபாய் வழியா வந்தோம். அங்க அவ்ளோ நேரம் சும்மா இருந்துட்டு,
இந்த ரெண்டு பேரும் (Gate opening time) முன்னால எங்கெங்கேயோ போயிட்டு வந்தாங்க.
எங்களுக்காகத் தான் விமானமே காத்திருந்தது.
அவங்களை நல்லா திட்டி விட்டுட்டேன்.
அப்புறம் ஒரு வழியா சென்னை வந்தா என்னோட லக்கேஜ காணோம்.
ரொம்ப நேரம் தேடியும் கிடைக்கல.
கம்பிளைன்ட் கொடுக்கலாம்னு form எழுதி கொடுத்துட்டு
திரும்பி பாத்தா
ஒரு வட மாநிலத்து அம்மா ஒருத்தங்க மாத்தி எடுத்துட்டு போய்ட்டு
அவங்களே திரும்ப எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க.
அப்ப இருந்த நிலைமைக்கு அவங்க மேல இரக்கம் தான் வந்தது,
தெரியாம தானே பண்ணாங்க.
நன்றி சொல்லிட்டு ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு..
முதல் விமானப் பயணத்திலேயே 3 சிக்கலை பார்த்தாச்சு.
நன்றி!!
Friday, April 24, 2020
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Our CEO/ COO had to reschedule and came on the next day on another flight.
Its more than a 10 years old story, still U remember like it happened very recently.... its ur own style of narration, and it is simple and enjoyable..... keep writing more.
Rename ur Blog name to KK's Quarantine Times.....
எளிய நடை,நல்ல அனுபவ பகிர்வு ...அருமை நண்பரே...
நன்றி
Gud raa
Post a Comment