Monday, September 5, 2016

நினைவில் நிறுத்த வேண்டிய மறந்த தலைவர்கள் - வ. உ. சிதம்பரனார்


இன்று (செப். 5), பெருமதிப்பிற்குரிய ஐயா வ.உ. சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். அனைவருக்கும் வ.உ. சிதம்பரனார் தினம் மற்றும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இன்று பல கீச்சுகளிலும் (Tweets), நிலை தகவலிலும் (wall posts), பெரும்பாலானவர்கள் ஆசிரியர் தின வாழ்த்தினை மட்டும் பதிவிடுகின்றனர்.  இந்த தினத்தில் மக்கள் எது முதன்மையானது என்பதை மறந்து விடுகின்றனர் :-(

ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கப் போவதில்லை.
ஆனால், யார் பெயரால் நாம் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம் என்பது நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்... 

திரு ராதாகிருஷ்ணன் ஆங்கில ஏகாதிபதித்தியத்தில் பணிபுரிந்தவர், விடுதலைக்காக கிஞ்சித்தும் முயற்சிக்காதவர்...
இறையியல் (Theology) தொடர்பாகவே, இந்து மதம் சார்ந்தே அவர்தம் பணி பெரும்பாலும் சுற்றியிருந்தது.
ராதாகிருஷ்ணன் இந்திய சாதிய அடக்குமுறைகளுக்கு எப்பொழுதும் ஆதரவாகவே இருந்தார். அவர், எவ்வித தியாக வாழ்வையும் மேற்கொள்ளாதவர்.
அவர் பார்ப்பனர் என்கிற காரணத்திற்காகவே ஆசிரியர் தினம் நம் மீது திணிக்கப்படுகிறது...

சான்று:






அண்ணல் அம்பேத்கர் திரு. ராதாகிருஷ்ணன் கருத்து குறித்து கூறியவை:


நாம் அவ்வாறு ஆசிரியர் தினத்தை கொண்டாடவேண்டுமெனில், அது "Jan 3" ஆகா இருத்தலே நலமாக இருக்கும்.
அன்று தான், சாவித்திரி அம்மையார் (Savitribai Phule) பிறந்த தினம் (Jan 3-1831).
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் இவரே. ஒடுக்கப்பட்டோருக்கான கல்வித் தாய் இவர்.


மேலும், அம்மையாரை பற்றி அறிந்து கொள்ள, Savitribai Phule

இக்கட்டுரையின் முதல் பகுதி ஆசிரியர் தினம் குறித்து ஒரு சிறிய விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே.

இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம், யார் நமக்காக உண்மையாக பாடுபட்டார்களோ அவர்களை எப்பொழுதும் நினைவில் நிறுத்தவே:

இதையே, ஐயன் வள்ளுவர்:

  "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
   செய்நன்றி கொன்ற மகற்கு" என்கிறார்.

விடுதலைப் போரில், தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது ஐயா. வ.உ.சிதம்பரனார் பெயர்.

இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும், வணிகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும், வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார்; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ்.எஸ். லாவோ" கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும் குறைத்துப் பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க, மக்கள் கூட்டம் அங்கே போனது.
இது நடைபெற்ற ஆண்டு: 1919. அப்போது நேரு மற்றும் காந்தி அவர்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட ஆரம்பிக்கவேயில்லை.

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை, விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை, வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

நாடு விடுதலைக்காக எவ்வளவோ போராட்டத்தில் ஈடுபட்டு, தான் சம்பாதித்த அனைத்து சொத்தையும் இழந்தார். பிறகு, ஆங்கிலேயே அரசால் கடும் சிறை தண்டனை அனுபவித்தார். அவர் வக்கீல் தொழில் புரியவும் தடை விதிக்கபட்டது. முடிவில் மண்ணடியில், மளிகை கடை நடத்தி 1936-ஆம் ஆண்டு வறுமையில் இறந்தார். இறக்கும் போதும் சுப்ரமணிய பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்" பாடலினை கேட்டபடியே இறந்தார்.

 இப்பொழுது, காந்தி மற்றும் நேரு தவிர்த்து, பெரும் சுதந்திர போராட்ட தலைவர்களை இத்தலைமுறை தெரிந்து கொள்ள தவறவிட்டனர். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்கு காரணமானவர்களை அறிந்து போற்ற வேண்டியது நமது கடமை. மேலும், வ.உ.சி-யை அறிந்து கொள்ள, https://ta.wikipedia.org/wiki/வ._உ._சிதம்பரம்பிள்ளை

புகைப்பட உதவி:
கண்ணபிரான் இரவிசங்கர்